நயன்தாரா நடித்த படத்திற்கு ஏ சான்றிதழ்.. ரசிகர்கள் ஷாக்..!

நயன்தாரா நடித்த படத்திற்கு ஏ சான்றிதழ்.. ரசிகர்கள் ஷாக்..!

நயன்தாரா ஷாருக் கானின் ஜவான் படத்தில் நடித்ததற்காக தற்போது பாலிவுட் ரசிகர்களிடமும் பாராட்டை பெற்று வருகிறார். ஆனால் அந்த படத்தின் நயன்தாரா ரோல் ஓரங்கட்டப்பட்டு தீபிகா படுகோன் ரோல் தான் முன்னிலைப்படுதப்பட்டு இருந்ததாகவும் ஒரு விமர்சனம் வருகிறது. அதனால் அட்லீ மீது நயன்தாரா கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க நயன்தாரா ஜெயம் ரவி ஜோடியாக நடித்து இருக்கும் இறைவன் படத்தின் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.

நயன்தாரா நடித்த படத்திற்கு ஏ சான்றிதழ்.. ரசிகர்கள் ஷாக் | Iraivan Movie Censored A

என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை எடுத்த அஹ்மத் தான் இறைவன் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் சென்சார் பணிகள் நிறைவு அடைந்து இருக்கிறது.

சென்சார் போர்டு படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கி இருப்பதாக வந்திருக்கும் செய்தி தற்போது ரசிகர்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. சைக்கோ படம் என்பதால் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. 

இந்த படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES