அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகாது.அதிர்ச்சி தகவல்!!
ஒவ்வொரு நாளும் லியோவை பற்றிய ஏதாவது ஒரு அப்டேட் வரவில்லை என்றால் அது விஜய் ரசிகர்களுக்கு வருத்தமான நாள். அப்படிருந்த நேரத்தில் இருந்து தற்போது வெளியே வந்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாக லியோ படத்தின் ஒவ்வொரு மொழி போஸ்டரையும் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு கொண்டு தான் இருக்கிறது. அந்த வரிசையில் இன்றும் ஒரு போஸ்டர் வெளிவரவுள்ளது.
அப்டேட் சரியாக வரவில்லை என்றாலே வருத்தமடையும் ரசிகர்களுக்கு தலையில் பெரிய பாறாங்கல்லை போட்டதுள்போல் புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆம், லியோ திரைப்படம் வெளிவராது என கூறி வருகிறார்கள்.
ஆனால், அது தமிழில் அல்ல ஹிந்தியில். அக்டோபர் 19ஆம் தேதி உலகளவில் லியோ படம் வெளிவரும் என அறிவித்துள்ள நிலையில், ஹிந்தியில் முக்கியமான மூன்று மல்டிபிளக்ஸ்-ல் [Multiplex] லியோ படத்தை திரையிடமாட்டோம் என முடிவு செய்துள்ளார்களாம்.
லியோ படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது. ஒரு படம் வெளிவந்து 8 வாரங்களுக்கு பின் தான் ஓடிடி-ல் வெளியிடுவோம் என நெட்பிளிக்ஸ் கூறியுள்ள நிலையில், லியோ படத்தின் ஹிந்தி வெர்ஷன் மட்டும் 4 வாரங்களில் ஓடிடி-ல் வெளியிடுவோம் என்று நெட்பிளிக்ஸ் முடிவு செய்துள்ளதாம்.
இதனால் கடுப்பான முக்கிய மூன்று மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் லியோ படத்தை எங்களுடைய மல்டிபிளக்ஸ்-ல் திரையிட மாட்டோம் என முடிவு செய்துள்ளதாக ஷாகின் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மூன்று மல்டிபிளக்ஸ் நிறுவனத்திலும் அதிக தியேட்டர் எண்ணிக்கையில் இருப்பதினால் வசூல் அடிவாங்கும் என்கின்றனர்.
இதனால் ரசிகர்களும் சற்று அப்செட்டில் இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.