பிரபல இயக்குனருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்: இது தான் காரணமா...

பிரபல இயக்குனருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்: இது தான் காரணமா...

பிரபல இயக்குனரான மிஷ்கினுக்கு விஜய் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கால் பதித்தவர் தான் இயக்குனர் மிஷ்கின். அந்தப் படம் அவரை உயர்த்திக் கொடுக்கவே அதனைத் தொடர்ந்து அஞ்சாதே என்ற படத்தை இயக்கி அதிகம் பிரபலமானார்.

மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்அடுத்தடுத்து பல படங்களை இயக்கி வெற்றி தோல்வியை சந்தித்து வந்த இவர் அண்மையில் வெளியான சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார். மேலும், விஜய்யின் லியோ திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

இந்நிலையில், விஜய்யின் ரசிகர்கள் இயக்குனர் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பியிருக்கிறார்கள்.

விஜய் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதற்கான காரணம் லியோ திரைப்படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய மிஷ்கின் விஜய்யை ஒருமையில் திட்டியதால் சகித்துக்கொள்ள முடியாமல் ஆத்திமடைந்த விஜய் ரசிகர்கள் இயக்குனர் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்அதுமட்டுமல்லாது அவர் விஜய்யிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும் என கூறி வருகின்றனர்.  

LATEST News

Trending News

HOT GALLERIES