பூக்கள் தான் பந்து, குச்சி தான் பேட்.. கிரிக்கெட் விளையாடும் மாளவிகா மோகன்..!

பூக்கள் தான் பந்து, குச்சி தான் பேட்.. கிரிக்கெட் விளையாடும் மாளவிகா மோகன்..!

நடிகை மாளவிகா மோகனன் ஒரே ஒரு குச்சியை வைத்து கிரிக்கெட் விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன். அதன் பிறகு விஜய் நடிப்பில் உருவான ’மாஸ்டர்’ தனுஷ் நடிப்பில் உருவான ’மாறன்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ’தங்கலான்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது என்று குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஒரு பாலிவுட் அதிரடி ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகன் சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார் என்பதும் அவ்வப்போது அவர் பதிவு செய்ய கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூக்களால் பந்து போட அதை ஒரு குச்சியை வைத்து பேட்டிங் செய்வது போல் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES