WWE வீரர்களுடன் நடித்த கார்த்தி.. எந்த படத்திற்காக தெரியுமா!!

நடிகர் கார்த்திக் நடித்த 'ஜப்பான்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் தற்போது அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடித்து வருகிறார் என்றும் இந்த படத்திற்கு ’வா வாத்தியாரே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கார்த்தி ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கார்த்தியுடன் இரண்டு WWE வீரர்கள் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. கெவின் மற்றும் சமி ஜென் (Kevin, Sami Zayn) ஆகிய இரண்டு WWE வீரர்களுடன் ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பர படத்தில் கார்த்தி நடித்துள்ளதாக தெரிகிறது. இந்த விளம்பர படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு WWE வீரர்களுடன் இணையத்தில் கசிந்த கார்த்தியின் இந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.