'தளபதி 68' படத்தில் சம்பவம் செய்யும் யுவன்.. அறிமுகப்பாடல் இதுவா!

'தளபதி 68' படத்தில் சம்பவம் செய்யும் யுவன்.. அறிமுகப்பாடல் இதுவா!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 68’ படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

மேலும் விஜய் தற்போது அமெரிக்காவில் 3டி ஸ்கேன் செய்வதற்காக சென்று உள்ளார் என்றும் அது மட்டுமின்றி இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.  

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி ’தளபதி 68’ திரைப்படத்தில் விஜய்யின் அறிமுக பாடல் தாறுமாறாக இருக்கும் என்றும் இந்த பாடல் தர லோக்கல் குத்து பாடல் என்றும் கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின் விஜய்யுடன் யுவன்சங்கர் ராஜா சேர்வதால் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் சூப்பர் ஹிட் ஆக வேண்டும் என்ற முனைப்பில் யுவன்சங்கர் ராஜா கம்போஸ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

LATEST News

Trending News