அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் இணையும் 'லியோ' வில்லன்.. மாஸ் தகவல்..!

அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் இணையும் 'லியோ' வில்லன்.. மாஸ் தகவல்..!

அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் நிச்சயம் உருவாகும் என்று சமீபத்தில் பல்வேறு விதமான வதந்திக்கு லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் முற்றுப்புள்ளி வைத்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது 

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் மெயின் வில்லன் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் வில்லனாக நடிக்க போகிறார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் மெயின் வில்லன் சஞ்சய் தத் என்று கூறப்படுகிறது. நடிகர் சஞ்சய் தத், விஜய்யின் ’லியோ’ படத்தின் மெயின் வில்லனாக நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

‘விடாமுயற்சி’ படத்தில் சஞ்சய் தத்தை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கிட்டத்தட்ட இது உறுதி செய்யப்பட்டதாகவும், அவர் தான் வில்லன் என்றும் கூறப்படுகிறது. எனவே சஞ்சய் தாத் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகிய இருவரும் வில்லன்களாக இந்த படத்தில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தில் இன்னும் யார் யாரெல்லாம் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக உள்ள இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News