யூடியூப் பிரபலத்தை காதலித்து கைப்பிடித்த சீரியல் நடிகை.. அழகிய திருமண புகைப்படங்கள்..!

யூடியூப் பிரபலத்தை காதலித்து கைப்பிடித்த சீரியல் நடிகை.. அழகிய திருமண புகைப்படங்கள்..!

விஜய் டிவி, சன் டிவி உட்பட பல தொலைக்காட்சிகளில் சீரியல் நடிகையாக இருக்கும் நடிகை ஒருவர் யூடியூப் பிரபலத்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.  

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’சிவா மனசுல சக்தி’ சன் டிவியில் ஒளிபரப்பான ’கண்மணி’ உட்பட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை ஜனனி பிரதீப். இவர் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்த நிலையில் அந்த பாடலில் உடன் நடித்த இனியன் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் தங்களது காதலை சமீபத்தில் அறிவித்தனர்.



இந்த நிலையில் தற்போது இனியன் - ஜனனி பிரதீப் திருமணம் சிறப்பாக நடந்து உள்ளது. ’எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை ஹரிப்பிரியா, சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷால் உட்பட பல சின்னத்திரை பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 



மேலும் இனியன் மற்றும் ஜனனி பிரதீப் ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளத்தில் திருமணம் குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்துள்ள நிலையில் அவை வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யூடியூப் மூலம் பிரபலமான இனியன், ’வித்யா நம்பர் ஒன்’ என்ற சீரியலில் நடித்துள்ளார் என்பதும், விஜய் டிவியில் ஒளிபரப்பான முரட்டு சிங்கிள்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES