விஜயகாந்தின் 71வது பிறந்த நாள் கொண்டாட்டம்... கட்டைவிரலை அசைத்து கெத்தாக அமர்ந்த தருணம்.

விஜயகாந்தின் 71வது பிறந்த நாள் கொண்டாட்டம்... கட்டைவிரலை அசைத்து கெத்தாக அமர்ந்த தருணம்.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், கம்பீரமாக கட்டைவிரலை அசைத்து தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 71வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இவரது பிறந்தநாளுக்கு பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இவரைப் பற்றின வதந்திகள் அதிகமாகவே வெளிவந்து கொண்டிருந்தது.

அந்தவகையில், விஜயகாந்த் பிறந்தநாளில் அவரை நேரில் காண்பதாற்காக, தொண்டர்கள் நேற்றே தயாராகி விட்டனர். இன்று அதிகாலையில் இருந்தே தேமுதிக தொண்டர்கள் கட்சி அலுவலகம் முன்பு குவிய துவங்கிவிட்டனர். இன்று காலை 11 மணிக்கு வந்துள்ளார் விஜயகாந்த்.

விஜயகாந்தின் 71வது பிறந்த நாள் கொண்டாட்டம்... கட்டைவிரலை அசைத்து கெத்தாக அமர்ந்த தருணம் | Dmdk Leader Vijayakanth 71St Birthday Today

வழக்கம்போல், வெள்ளை சர்ட், வெள்ளை வேட்டி, விபூதி கூலிங்கிளாஸ் சகிதம் விஜயகாந்த் வந்திருந்தார். அப்போது அவரை பார்த்ததுமே தொண்டர்கள் கரவொலி எழுப்பி வாழ்த்து முழக்கமிட்டனர்.

சிலரது கண்களில் கண்ணீர் வழிந்துள்ளது. பின்பு விஜயகாந்த தனது கைகளை உயர்த்தியதுடன், இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் கூறியுள்ளார். பின்பு தனது கட்டைவிரலை காண்பித்த தருணத்தில் மக்களின் கூச்சலால் கட்சி அலுவலகமே அதிர்ந்துள்ளது.

விஜயகாந்தின் 71வது பிறந்த நாள் கொண்டாட்டம்... கட்டைவிரலை அசைத்து கெத்தாக அமர்ந்த தருணம் | Dmdk Leader Vijayakanth 71St Birthday Today

LATEST News

Trending News

HOT GALLERIES