முடிவுக்கு வரும் சுந்தரி.. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.
கார்த்திக் ஏற்கனவே சுந்தரியை திருமணம் செய்து ஏமாற்றியவர் என்ற விஷயம் தற்போது அனுவுக்கு தெரியவந்துவிட்டது. அதனால் அவர் கடும் கோபத்தில் சுந்தரி வீட்டுக்கு சென்று சண்டை போடுகிறார். உண்மையை ஏன் மறைசீங்க என கேட்கிறார்.
மேலும் அங்கு வரும் கார்த்திக்கையும் திட்டி தீர்க்கிறார். இனி என்னை தேடி யாரும் வர கூடாது என அனு கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.
சுந்தரி சீரியல் முடிவுக்கு வருகிறது என்பது உறுதி ஆகிவிட்டது. ஆனால் தற்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் தற்போது வெளியாகி இருக்கிறது.
சுந்தரி சீரியலின் அடுத்த சீசனை சன் டிவி தொடங்க இருக்கிறதாம். அதில் சுந்தரி கலெக்டராக வருவார். இந்த தகவல் தற்போது சுந்தரி சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.