கீர்த்தி சுரேஷுக்கு பைக் ஓட்ட கற்று கொடுக்கும் உதயநிதி.. வைரல் வீடியோ..!

கீர்த்தி சுரேஷுக்கு பைக் ஓட்ட கற்று கொடுக்கும் உதயநிதி.. வைரல் வீடியோ..!

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’மாமன்னன்’ திரைப்படத்தின் 50 ஆவது வெற்றி விழா நேற்று நடந்த நிலையில் இதில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட அனுபவங்களை அனைவரும் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை தொகுத்து வீடியோவாக கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறிப்பாக அதில் பைக் ஓட்ட கீர்த்தி சுரேஷ்க்கு உதயநிதி கற்றுக் கொடுக்கும் காட்சிகள் உள்ளன.

கீர்த்தி சுரேஷ் மிக அசத்தலாக பைக் ஓட்டும் காட்சிகள், கார் ஓட்டும் காட்சிகள், டென்னிஸ் விளையாடும் காட்சிகள் ஆகியவை இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. ’கொடி பறக்கும் 50-வது நாள் மாமன்னன்’ என்ற கேப்ஷனுடன் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

LATEST News

Trending News

HOT GALLERIES