திருமண கோலத்தில் பிக் பாஸ் ஷிவானி.. அவரே வெளியிட்ட வீடியோ, இதோ...

திருமண கோலத்தில் பிக் பாஸ் ஷிவானி.. அவரே வெளியிட்ட வீடியோ, இதோ...

பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் எனும் சீரியலில் நடித்து வந்தார்.

இவர் சில சீரியல்களில் நடித்திருந்தாலும், இவருடைய போட்டோஷூட் புகைப்படங்கள் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

திருமண கோலத்தில் பிக் பாஸ் ஷிவானி.. அவரே வெளியிட்ட வீடியோ, இதோ | Shivani Narayanan Bridel Look Video

இதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ஷிவானி 90 நாட்கள் வரை நிகழ்ச்சியில் பயணித்தார். இந்த நிகழ்ச்சியில் சில காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார்.

பிக் பாஸ்-க்கு பின் தொடர்ந்து பல படங்களில் கமிட்டானார். வீட்டில விசேஷம், டி எஸ் பி, விக்ரம், நாய் சேகர் returns என பல நட்சத்திரங்கள் படங்களில் நடித்து வந்தார்.

இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவரான ஷிவானி தொடர்ந்து அதில் தன்னுடைய லேட்டஸ்ட் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பட்டுப்புடவை அணிந்து தங்க நகைகளுடன் திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை ஷிவானி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

LATEST News

Trending News

HOT GALLERIES