ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படம் உருவாகிறது.. படப்பிடிப்பு எப்போ ஆரம்பம் தெரியுமா...

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படம் உருவாகிறது.. படப்பிடிப்பு எப்போ ஆரம்பம் தெரியுமா

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்து கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாஸ் என்கிற பாஸ்கரன்.

இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து சந்தானம், நயன்தாரா,லட்சுமி ராமகிருஷ்ணன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படம் உருவாகிறது.. படப்பிடிப்பு எப்போ ஆரம்பம் தெரியுமா | Boss Engira Bhaskaran 2 Movie Updateமாபெரும் வெற்றியடைந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர்.

இந்நிலையில், கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர். இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெறும் வரும் நிலையில், செப்டம்பர் மாதம் பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து சந்தானம் ஹீரோவாக பயணிப்பார், நகைச்சுவை கதாபாத்திரமாக நடிக்க மாட்டார் என தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் ஹீரோயின் யார் என இதுவரை தெரியவில்லை.

 

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படம் உருவாகிறது.. படப்பிடிப்பு எப்போ ஆரம்பம் தெரியுமா | Boss Engira Bhaskaran 2 Movie Update

விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூட பாஸ் என்கிற பாஸ்கரன் 2 குறித்து சந்தானம் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News