ஜெயிலர் படத்தின் கதை இதுதான்.. ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை இதோ.
சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் நெல்சன் கூட்டணி சேர்ந்து இருக்கும் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது சென்சார் பணிகளும் முடிந்து U/A சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ரன் டைம் 169 நிமிடங்கள் என தகவல் வெளியானது உங்களுக்கு நினைவிருக்கலாம். மேலும் தற்போது ஜெயிலர் படத்தின் கதையும் வெளியாகி இருக்கிறது.
முத்துவேல் பாண்டியன் (ரஜினி) அவரது பணி ஓய்வுக்கு பிறகு சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது 6 வயது பேரன் யூடியூப் சேனல் நடந்த உதவி வருகிறார் முத்துவேல் பாண்டியன்.
அவரது மகன் அர்ஜுன் அசிஸ்டன்ட் கமிஷ்னராக பணியாற்றி வருகிறார். யாருக்கும் பயப்படாத, நேர்மையான அதிகாரியாக அவர் இருந்து வருகிறார். சிலை கடத்தல் பற்றி தீவிர விசாரணை நடத்தி சில முக்கிய புள்ளிகளை பிடிக்கிறார்.
இந்த நிலையில் அர்ஜுன் திடீரென வீட்டுக்கு வராமல் போக அவரை தேடி செல்கிறார் முத்துவேல் பாண்டியன். மகன் விசாரித்து வந்த வழக்குகள், கைது செய்யப்பட்டவர்கள் பற்றி தேடுகிறார். அந்த நேரத்தில் தான் மகன் அர்ஜுனை வில்லன்கள் கொன்றுவிட்டதாக அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.
ஆனால் ஒருகட்டத்தில் மகன் உயிருடன் இருப்பதை பார்த்து இன்னும் அவருக்கு அதிர்ச்சி ஆகிறது. மகனை திரும்ப அனுப்ப வேண்டும் என்றால் ஒரு நிபந்தனை விதிக்கிறார் வில்லன்.
இந்த நிலையில் மகனை மீட்க தனது பழைய நண்பர்கள் உதவியை முத்துவேல் பாண்டியன் கேட்கிறார். நண்பர்கள் உடன் சேர்ந்து ரஜினி எப்படி மகனை மீட்டார் என்பது தான் கிளைமாக்ஸ்.