கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் சீரியல் நடிகை காயத்ரி செய்த வேலை- வீடியோ பார்த்து பதறிய ரசிகர்கள்.
படங்களில் நடிக்கும் நடிகர்களை விட சின்னத்திரை கலைஞர்கள் தான் ரசிகர்களிடம் அதிகம் நெருக்கமாக இருக்கிறார்கள். அதிலும் விஜய் டிவி பிரபலங்களுக்கும் மக்களிடம் தனி வரவேற்பு கிடைக்கும்.
அப்படி சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை காயத்ரி.
அதன்பிறகு அரண்மனை கிளி, சித்தி 2, தாமரை, மோகினி, பிரியசகி, அழகி, பொன்னூஞ்சல், களத்து வீடு, மெல்ல திறந்தது கனவு என சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்திருக்கிறார்.
தற்போது ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் நடன இயக்குனர் யுவராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டதும், இவர்களுக்கு 12 வயதில் தருண் என்ற மகன் இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
அண்மையில் யுவராஜ்-காயத்ரி இருவரும் நாங்கள் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறோம் என சந்தோஷ செய்தி வெளியிட்டார்கள்.
இந்த நிலையில் நடிகை காயத்ரி தனது வீட்டின் மாடியில் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நடனம் ஆட அதைப்பார்த்த ரசிகர்கள் இந்த நேரத்தில் நடனம் தேவையா என பதறிப் போய் கமெண்ட் செய்து வருகிறார்கள்.