தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் சினிமா வருவதற்கு முன்பு எமதர்மராஜா நேரில் சந்தித்துள சம்பவம் எத்தனை பேருக்கு தெரியும்.
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் சினிமா வருவதற்கு முன்பு எமதர்மராஜா நேரில் சந்தித்துள சம்பவம் எத்தனை பேருக்கு தெரியும்.
எம் ஜி இராமச்சந்திரன்: சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்தவர் எம்ஜிஆர். அதே சினிமாதுறையைச் சேர்ந்த சக நடிகரான எம்ஜிஆருக்கும், எம் ஆர் ராதாவுக்கும் ஒரு சிறிய கருத்து வேறுபாடு காரணமாக எம்ஜிஆர் கழுத்தில் துப்பாக்கியால் சுட்டார். ஆனால் எம்ஜிஆருக்கு உயிர்பாதிப்பு எதுவும் ஏற்படாமல் கழுத்தில் சுட்டதால் குரல் மட்டும் பாதிக்கப்பட்டது.
அஜித் குமார்: அஜித்குமார் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு மெக்கானிக்காக பணியாற்றியுள்ளார் அப்போதிலிருந்தே மோட்டார் வாகனங்கள் மீது அதிகமாக ஆர்வம் இருந்ததால் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் போது பல விபத்துகள் நடந்துள்ளது. கிட்டத்தட்ட இவரது உடம்பில் பல அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம்: தமிழ் சினிமாவில் நடிப்பால் பல ரசிகர்களை வைத்துள்ளவர் நடிகர் விக்ரம். இவர் சினிமா வருவதற்கு முன் காலில் மட்டுமே 23 சர்ஜரி செய்துள்ளார். அதன்பிறகு ஐ படத்திற்காக 25 கிலோ உடல் எடையை ஏற்றி குறைத்தது பார்த்த டாக்டர்கள் விக்ரமிடம் இது போன்ற தவறுகள் இனிமேல் செய்யாதீர்கள் என திட்டி உள்ளனர். மேலும் உங்கள் உடல்நலம் மிகவும் பாதிப்படைந்துள்ளது என அறிவுரையும் கூறியுள்ளனர்.
சமந்தா: பல நடிகர்களுடன் ரொமன்ஸ் செய்த சமந்தா சினிமா வருவதற்கு முன்பு 2011 ஆம் ஆண்டு இம்முநிடி டிஸ் ஆர்டர் எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பின்பு 2 மாதங்கள் ஓய்வெடுத்துவிட்டு படப்பிடிப்பு தளங்களுக்கு நடிக்க சென்றுள்ளார்.
மனிஷா கொய்ராலா: மனிஷா கொய்ராலா 2012 ஆம் ஆண்டு ஓவரின் கேன்சர் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பின்பு சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டதால் அந்தக் கொடிய நோயிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
சோனாலி பிந்த்ரே: சோனாலி பிந்த்ரே கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பின்பு ட்ரீட்மெண்ட் எடுத்த பிறகு படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
ரித்திக் ரோஷன்: இந்திய அளவில் சிறந்த நடனமாடும் நடிகர் என்றால் ரித்திக் ரோஷன் தான். ஆனால் ஸ்கோலியோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது முதுகு தண்டு வளைவு இதனால் பல மருத்துவர்கள் இனிமேல் நடனமாட முடியாது என கூறியுள்ளனர். ஆனால் பல வருடங்கள் பயிற்சி செய்து இன்று வரை சிறப்பாக நடனம் ஆடி வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு மூளையில் ரத்த ஓட்டம் தடை ஏற்பட்டு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகவும் பாதிப்படைத்துள்ளார்.
ஷாருக்கான்: ஷாருக்கான் சினிமாவில் நடிப்பதற்கு முன் உடம்பில் பல அறுவை சிகிச்சைகளை செய்து உள்ளார். இவர் உடம்பில் அறுவை சிகிச்சை செய்யாத இடங்களே இல்லை என்று கூட கூறலாம் அந்த அளவிற்கு பல அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார்.
ராணா: பாகுபலி என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்த ராணா புகை மற்றும் மது பழக்கத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பின்பு சிகிச்சை பெற்று திரும்பியதாக ரஜினியின் அண்ணனான சத்யநாராயணன் பிரபல ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.