என் முடி அடர்த்தியாக இருக்க இதைதான் செய்கிறேன்: ரகசியம் கொன்ன ‘லவ் டூடே’ இவானா...

என் முடி அடர்த்தியாக இருக்க இதைதான் செய்கிறேன்: ரகசியம் கொன்ன ‘லவ் டூடே’ இவானா...

என் முடி அடர்த்தியாக இருக்க இதையெல்லாம் செய்கிறேன் என்று பேட்டி ஒன்றில் ‘லவ் டூடே’ நாயகி இவானா கூறியிருக்கிறார்.

மலையாளத்தில் ‘மாஸ்டர்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை இவானா. இவர் தமிழில் ‘நாச்சியார்’ என்ற படத்தின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ‘லவ் டூடே’ படத்தில் நடித்தார்.

இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்படத்தின் வெற்றியால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் இவானா. தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி தயாரிப்பில் ‘எல்ஜிஎம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இவ்விழாவில் தோனியும், சாக்ஷியும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ivana-actress-tamil-cinemaஇந்நிலையில், ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்த இவானா தன் தலை முடி அடர்த்தியாக, கருகருவென இருப்பதற்கு சீக்ரேட்டான ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், நான் வீட்டில் தயாரிக்கப்படும் எண்ணெய்யைதான் பயன்படுத்துவேன்.

ivana-actress-tamil-cinemaமுடி அடர்த்தியாக இருக்க கற்றாழை ஜூஸ், சின்ன வெங்காயம் ஜூஸ், தயிர் மூன்றையும் கலந்து முடியில் தேய்ப்பேன். மேலும், முடி வளர்ச்சிக்கு செம்பருத்தி இலை, ஊற வைத்த வெந்தயம் இவற்றை நன்கு அரைத்து முடி முழுவதும் பூசி, 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிப்பேன். இப்படி செய்து வருவதால் என் முடி அடர்த்தியாகவு, கருகருவெனவும் இருப்பதாக தெரிவித்தார். 

LATEST News

Trending News