விஜய்சேதுபதியின் 50வது படம்.. மாஸ் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்..!

விஜய்சேதுபதியின் 50வது படம்.. மாஸ் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்..!

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு 50வது படம் என்பது முக்கியத்துவமாக பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் விஜய் சேதுபதியின் 50வது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கடந்த பல ஆண்டுகளாக வெற்றிகரமான நாயகனாக தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவரது 50வது படத்தை ஃபேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்தை நிதிலன் சாமிநாதன் என்பவர் இயக்க இயக்குகிறார். இவர் ஏற்கனவே விதார்த், பாரதிராஜா நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வசூல் அளவில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது விஜய் சேதுபதி படத்தை இயக்கி வருகிறார்.

விஜய் சேதுபதி 50வது படத்திற்கு ’மகாராஜா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையில், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்றும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES