ஒரே படத்தில் இணைகிறார்களா கமல் - அஜித் - சூர்யா..? கெளதம் மேனன் யுனிவர்சல் படம்..!

ஒரே படத்தில் இணைகிறார்களா கமல் - அஜித் - சூர்யா..? கெளதம் மேனன் யுனிவர்சல் படம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வேட்டையாடு விளையாடு’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது சமீபத்தில் கூட இந்த படம் மீண்டும் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ’வேட்டையாடு விளையாடு 2’ திரைப்படம் குறித்து கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

உலக நாயகன் கமல்ஹாசனை சந்தித்து ’வேட்டையாடு விளையாடு 2’ படத்தின் கதையை கெளதம் மேனன் கூறியதாகவும் அதைக் கேட்டு கமல்ஹாசன் ஆச்சரியமடைந்து உடனே ஒப்புதல் கொடுத்து விட்டதாகவும் இதனை அடுத்து இந்த படத்தின் பணிகளை தொடங்கி விட்டதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கெளதம் மேனன் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி ’வேட்டையாடு விளையாடு’ ராகவன், ’காக்க காக்க’ அன்பு செல்வன் மற்றும் ’என்னை அறிந்தால்’ சத்யதேவ் ஆகிய மூன்று கேரக்டர்களை இணைக்கும் முயற்சியும் நடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அப்படி என்றால் கமலஹாசன் உடன் இந்த படத்தில் அஜித் மற்றும் சூர்யா நடிப்பார்களா? இந்த படம் கெளதம் மேனன் யுனிவர்சல் படமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது மட்டும் நடந்தால் தமிழ் திரை உலகில் மாஸ் திரைப்படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை கௌதம் மேனன் சாத்தியமாக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News