மாமன்னன் படத்திற்காக நடிகர் வடிவேலு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா...
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த திரைப்படம் மாமன்னன்.
உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் வடிவேலுவும் ஹீரோவிற்கு நிகரான ஒரு ரோலில் நடித்துள்ளார்.
இதுவரை வடிவேலு நடிக்காத வித்தியாசமான ரோலில் இந்த படத்தில் அவர் நடித்திருப்பதால் ரசிகர்களும் ஆர்வமாக படத்தை காண்கின்றனர்.
இப்படம் அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அடுத்தடுத்து அவருக்கு நல்ல வாய்ப்புகள் குவியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் நடிப்பதற்காக வடிவேலுவிற்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதாவது மாமன்னன் படத்தில் நடிப்பதற்காக வடிவேலு ரூ. 2 முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்கலாம் என சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்.
படத்தில் மாமன்னனே வடிவேலு தான் என்பதால் அவருக்கு அதிகமான தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டியிற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.