உண்மை உங்களை காயப்படுத்தும்... - நடிகை ரச்சிதா உருக்கமான பதிவு...
‘உண்மை உங்களை காயப்படுத்தும்’ என்று நடிகை ரக்ஷிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரில் ஜோடியாக நடித்த தினேஷை ரக்ஷ்தா காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட பிறகு இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் ரக்ஷிதா கலந்து கொண்டார். அவருக்கு ஆதரவாக தினேஷ் சமூகவலைத்தளங்களில் பேசி வந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ரக்ஷிதா வெளியே வந்த பிறகு இரண்டு பேரும் இணைந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால், சமீபத்தில் ரக்ஷிதா கணவர் தினேஷ் மீது போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகளை தினேஷ் அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருவரையும் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் நடந்த பிறகு, தன் சமூகவலைத்தளத்தில் தினேஷ் ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே! நான் நன்றாக இருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். தற்போது, நடிகை ரக்ஷதா தனது புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்து பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில், ‘பலமுறை உண்மை உங்களை காயப்படுத்தும். ஆனால், அந்த உண்மை உங்களுக்கு சுதந்திரத்தைக் கொடுக்கும். சில சமயங்களில் அந்த சூழலை நாம் ஏற்றுக் கொண்டு புன்னகையுடன் கடந்து செல்ல வேண்டும் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.