லோகேஷ் படத்தில் நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை.. இவ்வளவு பெரிய நடிகரே இப்படி கூறிவிட்டாரா..!

லோகேஷ் படத்தில் நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை.. இவ்வளவு பெரிய நடிகரே இப்படி கூறிவிட்டாரா..!

தமிழ் சினிமாவில் "மாநகரம்" திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதனை தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற ஹிட் படங்களை கொடுத்தார்.

இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் "லியோ" படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

மேலும், லோகேஷ் இயக்கத்தில் நடிக்க பல திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் பிரபாஸ் கூட லோகேஷ் இயக்க நடிக்க போகிறார் என தகவல் வெளிவந்தது.

ஆனால், இதை பிரபாஸ் மறுத்துள்ளார். இது குறித்து பேட்டியில் பதிலளித்த பிரபாஸ், "அவர் கூறுவதில் உண்மை இல்லை. மேலும், அவருடன் இணையும் எண்ணம் இப்போதைக்கு எனக்கு இல்லை" என தெரிவித்திருந்தார். இதனால் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்க வாய்ப்பு இல்லை என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

லோகேஷ் படத்தில் நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை.. இவ்வளவு பெரிய நடிகரே இப்படி கூறிவிட்டாரா | Prabhas Clarify About Lokesh Kanagaraj Movie

மேலும், லோகேஷ் அடுத்து ரஜினியின் படத்தை தான் இயக்க போவதாக சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் லோகேஷ் அடுத்ததாக யாருடைய படத்தை இயக்க போகிறார் என்று.

LATEST News

Trending News