ராவணனாக கே ஜி எஃப் ஹீரோ யாஷ்- மீண்டும் உருவாகும் ராமாயணம்...

ராவணனாக கே ஜி எஃப் ஹீரோ யாஷ்- மீண்டும் உருவாகும் ராமாயணம்...

மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம் படமாகவும், சீரியலாகவும் காலத்துக்கு ஏற்றவாறு வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ராமாயணம் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் "ஆதிபுருஷ்". இப்படம் பிரபாஸ் நடிப்பில் அடுத்த வாரம் திரைக்கு வர உள்ளது.

ராவணனாக கே ஜி எஃப் ஹீரோ யாஷ்- மீண்டும் உருவாகும் ராமாயணம் | Kgf Hero To Act Ravanan In Ramayanam

இதனை தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் ராமாயணம் கதையை வைத்து படம் தயாராக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை "தங்கல்" பட இயக்குனர் நிதேஷ் திவாரி ரூ. 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இயக்க உள்ளதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்த ராமாயணம் படத்தில் ராவணனாக கே ஜி எஃப் ஹீரோ யாஷ் தேர்வாகியுள்ளதாக வந்த தகவல் மொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இதில் ராமராக ரன்பீர் கபூர் மற்றும் சீதையாக ஆலியா பட் நடிக்கப்போவதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் நிதேஷ் திவாரி ராமாயணம் என இப்படத்திற்கு பெயரிட்டுள்ளாராம்.

ராவணனாக கே ஜி எஃப் ஹீரோ யாஷ்- மீண்டும் உருவாகும் ராமாயணம் | Kgf Hero To Act Ravanan In Ramayanam

 

பிரமாண்டமாக உருவாக்கவுள்ள இப்படத்தை பற்றி உறுதியான தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்க படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES