20 ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் இணையும் 44 வயது நடிகை.. இது சூப்பர்ஹிட் ஜோடி ஆச்சே...

20 ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் இணையும் 44 வயது நடிகை.. இது சூப்பர்ஹிட் ஜோடி ஆச்சே...

விஜய் தற்போது லியோ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

லியோ படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கிறார் என்பதை அனைவரும் அறிவோம்.

20 ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் இணையும் 44 வயது நடிகை.. இது சூப்பர்ஹிட் ஜோடி ஆச்சே | Popular Actress To Pair Up With Vijay

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

இந்நிலையில், தளபதி 68 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை ஜோதிகாவை தேர்ந்தெடுத்துள்ளார்களாம்.

விரைவில் ஜோதிகாவுடன் பேச்சு வார்த்தை நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. குஷி மற்றும் திருமலை படங்களில் விஜய் - ஜோதிகா இணைந்து நடித்திருந்தனர்.

20 ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் இணையும் 44 வயது நடிகை.. இது சூப்பர்ஹிட் ஜோடி ஆச்சே | Popular Actress To Pair Up With Vijay

 

அதன்பின் 20 ஆண்டுகள் கழித்து தளபதி 68ல் தான் இந்த சூப்பர்ஹிட் கூட்டணி அமையப்போவதாக பேசப்படுகிறது.

இப்படத்தில் நடிக்க ஜோதிகா ஓகே சொல்வாரா? இல்லை மெர்சல் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை நிராகரித்தது போலவே இந்த வாய்ப்பையும் நிராகரித்து விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES