நீண்ட முடி, தாடி, மீசையுடன்… வைரலாகும் நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்‘ கெட்டப் புகைப்படம்!

நீண்ட முடி, தாடி, மீசையுடன்… வைரலாகும் நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்‘ கெட்டப் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் தனுஷ் புதிய திரைப்படத்திற்காக தனது தோற்றத்தையே முழுமையாக மாற்றியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான ‘வாத்தி’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கடைசியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றிப்பெற்றதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

ஏறக்குறைய இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் வரலாற்றுப் பாணியில் உருவாகிவரும் இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் தனது முழு தோற்றத்தையும் மாற்றிக் கொண்டு நீண்ட முடி, தாடி, மீசை என வளர்த்திருக்கிறார். இந்தத் தோற்றத்துடன் நேற்று மும்பை விமான நிலையத்திற்கு நடிகர் தனுஷ் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘கேப்டன் மில்லர்‘ திரைப்படம் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நடிகர் தனுஷின் புது கெட்டப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் மேலும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். கூடவே நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES