குக் வித் கோமாளி பிரபலத்துக்கு ஜோடியாகும் நடிகை தமன்னா.. எந்த படத்தில் தெரியுமா!
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் தற்போது ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அதே போல் சுந்தர்.சியின் அரண்மனை 4 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இப்படத்தில் முதன் முதலில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதாக இருந்தார். ஆனால், திடீரென அவர் வெளியேற விஜய் சேதுபதி நடிக்கவிருந்த ஹீரோ ரோலில் சுந்தர்.சி நடித்து வருகிறார்.
தமன்னா மட்டுமின்றி இப்படத்தில் ராஷி கண்ணாவும் ஹீரோயினாக நடித்து வருகிறார். சுந்தர்.சியின் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், தமன்னா யாருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறார் என இதுவரை தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், இப்படத்தில் பிரபல நடிகர் சந்தோஷ் பிரதாப் முக்கிய ரோலில் நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக தான் தமன்னா நடிக்கிறார் என தெரியவந்துள்ளது.
சந்தோஷ் பிரதாப், ஓ மை கடவுளே, சார்பட்டா பரம்பரை, சமீபத்தில் வெளிவந்த கழுவேத்தி மூர்க்கன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.