துருவ் விக்ரமிற்கு அடித்த அதிர்ஷ்டம்.. தோல்வி படத்திற்கு பிறகும் இத்தனை கோடி சம்பளமா...

துருவ் விக்ரமிற்கு அடித்த அதிர்ஷ்டம்.. தோல்வி படத்திற்கு பிறகும் இத்தனை கோடி சம்பளமா...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரம். இவருடன் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தேடி தரவில்லை.

இப்படத்தை தொடர்ந்து தனது தந்தையுடன் இணைந்து மகான் திரைப்படம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது.

துருவ் விக்ரமிற்கு அடித்த அதிர்ஷ்டம்.. தோல்வி படத்திற்கு பிறகும் இத்தனை கோடி சம்பளமா | Dhruv Vikram Salary For Next Movie Is Huge

அடுத்ததாக துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கப்போகிறார். ஆனால், அவர் மாமன்னன் படத்தில் பிசியாக இருப்பதினால் அதற்க்கு முன் கணேஷ் பாபு இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இந்நிலையில், இப்படத்தில் நடிக்க துருவ் விக்ரம் ரூ. 5 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை கேள்விப்பட்ட கோலிவுட் வட்டாரத்தினர் அதிர்ச்சியாகியுள்ளார்களாம். இதுவரை துருவ் விக்ரம் நடித்து திரையரங்கில் வெளிவந்த படம் தோல்வியடைந்துள்ள நிலையில் ரூ. 5 கோடி சம்பளம் வாங்குவது எப்படி என கேள்வி எழுந்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES