'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் ரஜினிகாந்த்? இதுதான் காரணமா?

'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் ரஜினிகாந்த்? இதுதான் காரணமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் காட்சிகள் முடிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் நாளை முதல் சென்னையில் 5 நாட்கள் இந்த படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் இந்த பாடல் காட்சியில் தமன்னா உட்பட நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

ஐந்து நாட்கள் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட இருப்பதாகவும் இந்த பாடல் காட்சி படப்பிடிப்பில் ரஜினியும் சில மணி நேரங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே தமன்னாவின் பாடல் காட்சியில் ரஜினிகாந்த் உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாடல் காட்சி பிரம்மாண்டமாக உருவாக்கப்பட இருப்பதாகவும், இந்த பாடல் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, மோகன்லால் உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News