யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குவது இந்த பிரபல இயக்குனரா?
தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவ்வப்போது ஹீரோவாக அவர் நடிக்க ஒப்பந்தமாகும் திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தமிழ் திரை உலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ராதா மோகன், யோகி பாபு ஹீரோவாக நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
’அழகிய தீயே’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராதா மோகன், அதன் பின்னர் ஜோதிகா நடித்த ’மொழி’ த்ரிஷா நடித்த ’அபியும் நானும்’ உட்பட பல திரைப்படங்களை இயக்கினார். தற்போது அவர் எஸ்ஜே சூர்யா நடித்துள்ள ’பொம்மை’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் அவருடைய அடுத்த திரைப்படத்தில் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.