ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் 3 முன்னணி நாயகிகள்.. இதுவரை இல்லாத பெரிய பட்ஜெட்..!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி தற்போது ’இறைவன்’ ’சைரன்’ மற்றும் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாகி வரும் பட என பிசியான நடிகராக உள்ளார். இந்நிலையில் அவர் மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக ஜெயம் ரவியின் 32 வது திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் இதுவரை இல்லாத அளவில் ஜெயம்ரவியின் அதிகபட்ச பட்ஜெட் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் மூன்று முன்னணி நாயகிகள் நடிக்க இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் கீர்த்தி ஷெட்டி, மற்றொருவர் கல்யாணி பிரியதர்ஷன் என்றும் மூன்றாவதாக ஒரு பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இடம் உதவி இயக்குனராக இருந்த புவனேஷ் என்பவர் இயக்க இருப்பதாகவும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வரும் ஜூலை மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த படம் ஜெயம் ரவியின் திரை உலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது