சிம்புவுக்கு ஜோடியாக டாப் பாலிவுட் ஹீரோயின்? எதிர்பார்க்காத ஒரு நடிகை
நடிகர் சிம்பு மாநாடு, வெந்து தணிந்தது காடு மற்றும் அதை தொடர்ந்து பத்து தல ஆகிய படங்கள் மூலமாக தற்போது ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார்.
அடுத்து சிம்பு தனது 48வது படத்திற்காக தேசிங்கு பெரியசாமி உடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார். அந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஹீரோயினாக தீபிகா படுகோன் உடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் தீபிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர் சிம்பு படத்தில் நடிக்கிறாரா என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.