'கங்குவா' படத்திற்காக வேற லெவலுக்கு மாறிய சூர்யா.. மாஸ் புகைப்படம்..!

'கங்குவா' படத்திற்காக வேற லெவலுக்கு மாறிய சூர்யா.. மாஸ் புகைப்படம்..!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த செய்திகள் இணைய தளங்களில் வெளியாகி எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் பிளாஷ்பேக் சரித்திர காட்சிகளுக்காக சூர்யா தனது உடல் எடையை அதிகரித்து வேற லெவலில் மாறி இருக்கிறார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது இது குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

சூர்யா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அவர் உடல் எடையை ஏற்றியதோடு அல்லாமல், செம ஃபிட்டாக இருப்பதையும் பார்த்து ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

ஒரு திரைப்படத்தின் கதாபாத்திரத்திற்காக தனது உடலை ஏற்றி இறக்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் சூர்யா கடந்த பல ஆண்டுகளாக நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்காக வேற லெவலில் அவர் உடம்பை ஏற்றி இருப்பதை பார்த்து ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வரும் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் மதன் கார்க்கி வசனத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES