சொக்கத் தங்கமே… ஒரு இன்ஸ்டா புகைப்படத்திற்காக நிவேதா பெத்துராஜை கொண்டாடும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து சமூகவலைத் தளங்களில் ஆக்டிவாக இருந்துவரும் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
கோவில்பட்டியில் பிறந்து வளர்ந்து பின்னர் துபாயில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்தான் நிவேதா பெத்துராஜ். மாடலிங் மீது தீராத ஆர்வம் கொண்டவரான இவர் சென்னைக்கு வந்து சினிமா துறையில் கவனம் செலுத்தினார். இதன் பலனாக 2016 இல் ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து என் மனசு தங்கம், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் போன்ற திரைப்படங்களில் நடித்த இவருக்கு ‘டிக் டிக் டிக்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
இந்நிலையில் பார்முலா ஒன் கார் ஓட்டுவதற்குப் பயிற்சிப் பெற்றுவந்த நிவேதா பெத்து ராஜ் அதில் சாதித்தும் காட்டியிருந்தார். மேலும் தமிழ் திரைப்படங்களைப் போலவே தெலுங்கு சினிமா வட்டாரத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. இதையடுத்து சமூக வலைத்தளத்திலும் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் புதிய போட்டோ ஷுட் புகைப்படங்களை அதில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது சிவப்பு நிறத்திலான உடையணிந்து நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாராட்டைக் குவித்து வருகிறது. இந்தப் புகைப்படத்திற்குத்தான் ரசிகர் ஒருவர் 24 கேரட் கோல்ட் போலவே இருக்கிறீர்கள், இன்னொருவர் இந்தியன் க்ரஷ், குயின் என்றெல்லாம் பாராட்டித் தீர்த்து இருக்கின்றனர்.