அஜித் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதற்கு காரணம் இந்த திரையுலகம் தான்.. உண்மையை உடைத்த பிரபலம்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மீடியா சம்மந்தப்பட்ட விழாக்களிலும், திரையுலக விழாக்களிலும் வருவதை நிறுத்திவிட்டார்.
அதே போல் பேட்டிகளில் கூட அஜித்தை காணமுடிவில்லை. ஏன் திடீரென அஜித் இப்படி தன்னை மீடியாவிடம் இருந்து தனிமைப்படுத்திக்கொண்டார் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.
அதற்க்கு காரணம் கலைஞரின் முன் திரையுலகினருக்காக துணிவுடன் அஜித் பேசியது தான். ஆம், சினிமாவிற்குள் அரசியல் வேண்டாம். பொது விழாக்களுக்கு சில முக்கிய பிரமுகர்கள் எங்களை மிரட்டி வரவழைக்கிறார்கள்.
சினிமாவையும், அரசியலையும் ஒன்று சேர்க்காதீர்கள் என்றும் கலைஞர் கருணாநிதி முன் துணிச்சலாக பேசினார் அஜித். இதனால் அஜித்துக்கு எதிராக பல விஷயங்கள் கிளம்பியது. திரையுலகிற்காக அஜித் பேசினார்.
ஆனால், அதற்காக அவருக்கு துணையாக திரையுலகம் வரவில்லை. இதனால் மனமுடைந்துபோன அஜித் தன்னை இதுபோன்ற விஷயங்களில் இருந்து தனிமைப்படுத்திக்கொண்டார். இந்த விஷயத்தை பிரபல பத்திரிகையாளர்கள் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.