டூப் இன்றி அந்தரத்தில் பறந்து ஸ்டண்ட் காட்சியில் நடித்த பிரபல நடிகை...
பிரபல தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு அந்தரத்தில் பறந்து டூப் இன்றி ஸ்டண்ட் காட்சியில் தைரியமாக நடித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு மகளும் நடிகையுமான லட்சுமி மஞ்சு தெலுங்கு திரை உலகில் பல படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’கடல்’ ஜோதிகா நடித்த ‘காற்றின் மொழி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் ஒரு சில ஆங்கில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அவர் இன்னும் டைட்டில் வைக்கப்படாத ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்திற்கான ஒரு ஸ்டண்ட் காட்சியில் அந்தரத்தில் ரோப்பில் தொங்கிக்கொண்டு நடித்துள்ளார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மிகவும் தைரியமாக டூப் இன்றி அந்தரத்தில் பறந்து செய்யும் ஸ்டண்ட் காட்சியில் நடிக்க பிரபல நடிகர்களே தயங்கி வரும் நிலையில் லட்சுமி மஞ்சு தைரியமாக இந்த காட்சியில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.