Audi கார் தான் வேண்டும்.. அடம் பிடித்த தனுஷ்.. இப்படியெல்லாம் கொடுமை நடக்கிறதா

Audi கார் தான் வேண்டும்.. அடம் பிடித்த தனுஷ்.. இப்படியெல்லாம் கொடுமை நடக்கிறதா

தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைகிறார்.

தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கும் தனுஷ் கேரவனுக்குள் 150 அடி தான் தூரமாம். தனுஷ் நினைத்தால் அங்கிருந்து நடந்தே வந்துவிட முடியும். ஆனால், ரசிகர்கள் கூட்டம் இருக்கும் என்பதினால் தனக்கு கேரவனில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு வருவதற்கு ஒரு கார் வேண்டும் என தயாரிப்பாளரிடம் தனுஷ் கேட்டுள்ளார்.

அதன்படி தயாரிப்பாளருக்கு இனோவா கார் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். கேரவனில் இருந்து கீழே இறங்கி வந்த தனுஷ் இனோவா காரை பார்த்தவுடன் கடுப்பாகி, படப்பிடிப்பில் இருந்து கிளம்பிவிட்டாராம். ஏனென்றால் நடிகர் தனுஷுக்கு Audi கார் தான் வேண்டுமாம். இதை அதன்பின் தயாரிப்பாளருக்கு போன் காலில் கூறியுள்ளார்.

கேரவனில் இருந்து 150 அடி தொலைவில் இருக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்ல தயாரிப்பாளரிடம் Audi கார் கேட்டுள்ளார் தனுஷ். இப்படியெல்லாம் கூட ஒரு கொடுமை நடக்கிறதா என செய்தியை கேட்ட திரையுலகினர் பலரும் ஷாக்காகியுள்ளனர். இந்த தகவல் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES