பிரபல இயக்குனரை 2வது திருமணம் செய்கிறாரா பிக்பாஸ் ரக்‌ஷிதா .. அப்ப ராபர்ட் மாஸ்டர் என்ன ஆச்சு...

பிரபல இயக்குனரை 2வது திருமணம் செய்கிறாரா பிக்பாஸ் ரக்‌ஷிதா ...

சீரியல் நடிகையும், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரக்‌ஷிதா, இயக்குனர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்ய போவதாக வதந்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ரக்‌ஷிதா ’பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமானார் என்பது அதன் பிறகு ’சரவணன் மீனாட்சி’ உள்பட ஒரு சில சீரியலில் நடித்தார் என்பது தெரிந்தது. மேலும் இவ்வாறு ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரக்‌ஷிதா அந்த நிகழ்ச்சியில் 91 நாட்கள் வரை தாக்குப்பிடித்து விளையாடினார். மேலும் இந்த நிகழ்ச்சியின்போது ராபர்ட் மாஸ்டர் உடன் நெருக்கமாக இருந்தார் என்பதும் அதன் பிறகு இருவரும் காதலிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் ரக்ஷிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் ராபர்ட் மாஸ்டரை ஒரு நல்ல நண்பராக தான் ஏற்றுக் கொண்டதாக கூறி காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் நடிகர் ரக்‌ஷிதா, தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் தற்போது பிரிந்து இருப்பதாகவும் விரைவில் முறைப்படி விவாகரத்து பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் ரக்‌ஷிதா சீரியல் இயக்குனர் ஒருவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்ய போவதாகவும் ஒரு வதந்தி திரையுலக வட்டாரங்களில் பரவி வருகிறது. இந்த வதந்தி உண்மையா? அல்லது வதந்தியாகவே இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News