பல கோடி ரூபாயை அள்ளிய KGF 2! படம் வெளியாகும் முன்பே பெரும் சாதனை! படத்தை வாங்கிய முக்கிய நிறுவனம்!

பல கோடி ரூபாயை அள்ளிய KGF 2! படம் வெளியாகும் முன்பே பெரும் சாதனை! படத்தை வாங்கிய முக்கிய நிறுவனம்!

இந்திய சினிமாவில் அடுத்ததாக மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள படம் KGF 2. ரூ 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் இப்படத்தில் கன்னட நடிகர் யஷ் ஹீரோவாக நடித்து வருகிறார். வில்லனாக ஹிந்தி சினிமாவில் சஞ்சய் தத் நடிக்கிறார். ஹீரோயினாக ரவீனா டாண்டன் இணைந்துள்ளார்.

முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்று பெரும் வசூலை அள்ளியதை தொடர்ந்து KGF இரண்டாம் பாகத்தின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் எடுக்கப்படும் இப்படத்தின் தென்னிந்திய சாட்டிலைட் உரிமையை முக்கிய டிவி நிறுவனம் ஒன்று ரூ 50 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம்.

மேலும் அமேசான் தளத்தில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ 55 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக படம் வெளியாகும் முன்னரே இப்படம் ரூ 105 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கும் இப்படம் ஜூலை 16 ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES