நடிகர் விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு? - வெளியான முக்கிய தகவல்...
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய். 1984 ஆம் ஆண்டு வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
பின்னர் 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் மாண்புமிகு மாணவன், செல்வா, காலமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே, ஒன்ஸ் மோர், துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பிரியமானவளே, பத்ரி, ஷாஜகான், யூத், பகவதி, வசீகரா, புதிய கீதை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
தற்போது நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் ஆரம்காலத்தில் இருந்து காதல் கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்து வந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிறார்.
விஜய் குறித்து யாரும் அறிந்திடாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் குறித்து ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் தெரிவிக்கையில் பிரியமுடன் படத்தில் இருவரும் பணியாற்றிய போது 2000 ஆண்டுக்கு பிறகு தான் நடிக்கப்போவதில்லை என்றும்,
நடிப்பை நிறுத்திவிட்டு இயக்குநராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அவரே நினைத்து பார்க்காத அளவில் 2000 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படங்கள் மெகா ஹிட் அடித்ததால் அந்த முடிவை கைவிட்டு நடிப்பில் முழு கவனம் செலுத்தி முன்னணி நடிகராக ஜொலித்து வருகிறார். தன் இயக்குநர் ஆசையை மகன் சஞ்சய் மூலம் நிறைவேற்ற இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.