அந்தரத்தில் பறந்து ஆக்சன் காட்சியில் சமந்தா.. வைரல் புகைப்படங்கள்..!

அந்தரத்தில் பறந்து ஆக்சன் காட்சியில் சமந்தா.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகை சமந்தா அந்தரத்தில் பறந்து ஆக்சன் காட்சிகளில் நடித்த காட்சிகளின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா என்பதும் அவர் நடிப்பில் உருவான ’சாகுந்தலம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் ’குஷி’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சமந்தா திரைப்படங்களில் மட்டுமின்றி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தனியார் குளிர்பான விளம்பர படத்தில் சமீபத்தில் அவர் நடித்த காட்சியின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் கயிற்றில் தொங்கியபடி அந்தரத்தில் ஆக்சன் காட்சியில் நடித்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து லைக்ஸ், கமெண்ட்களை பதிவு செய்து கொடுத்து வருகின்றனர்.

சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்களை பதிவு செய்த 20 நிமிடங்களில் சுமார் ஒன்றரை லட்சம் லைக் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமந்தாவின் கடின உழைப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

LATEST News

Trending News