சென்னையில் 'லியோ' அடுத்தகட்ட படப்பிடிப்பு.. யார் யார் கலந்து கொள்கிறார்கள் தெரியுமா?

சென்னையில் 'லியோ' அடுத்தகட்ட படப்பிடிப்பு.. யார் யார் கலந்து கொள்கிறார்கள் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் கூட இந்த படத்தின் நீண்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதில் விஜய், த்ரிஷா மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் விஜய், சஞ்சய் தத் கலந்து கொள்ளும் ஆக்சன் காட்சிகள் நடைபெற இருப்பதாகவும் கிட்டத்தட்ட ஒரு மாதம் இந்த படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு முடித்தவுடன் பட குழுவினர் அடுத்த கட்டமாக வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES