குட்டி சூர்யாவாக நடித்தது கயல் சீரியல் ஹீரோவா? வைரலாகும் மூவி சீன்!

குட்டி சூர்யாவாக நடித்தது கயல் சீரியல் ஹீரோவா? வைரலாகும் மூவி சீன்!

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. இதில் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் தான் கயல்.

கடின உழைப்பாளியான ஹீரோயின் கயல், தன் குடும்பத்தில் ஒரே வருமானம் ஈட்டும் நபராக இருந்து கஷ்டப்பட்டு குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

கயல் மற்றும் அவளுடைய குடும்ப உறுப்பினர்களை சுற்றியும் மற்றும் அவரை காதலிக்கும் எழிலை சுற்றியும் கயல் சீரியலின் கதை நகர்கிறது.

கிட்டத்தட்ட இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் அவர்கள் பட கதை தான் இந்த சீரியலின் கதையும்.

இந்த சீரியலில் கயலாக பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார்.தற்போது சன் டிவி சீரியல்களில் அதிக TRP ரேட்டிங்கில் முதல் சில இடங்களில் கயல் இருந்துவருகிறது.

விறுவிறுப்பான கதையும், நடிகை சைத்ரா ரெட்டியின் இயல்பான நடிப்பும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்த சீரியலில் ஹீரோ எழிலரசனாக ராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே குளிர் 100 உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் சஞ்சீவ் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆச்சரியத் தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

வேல் படத்தில் தான் நடித்துள்ள காட்சியின் ஸ்கிரீன் ஷாட் பகிர்ந்து, நடிகராக என் முதல் படம். என்ன படம் என்று கண்டுபிடியுங்கள் என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார். பெரும்பாலான ரசிகர்கள் வேல் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

LATEST News

Trending News

HOT GALLERIES