அஜித்தின் அடுத்த புரொஜக்ட்.. டைட்டிலை அறிவித்த சுரேஷ் சந்திரா..!

அஜித்தின் அடுத்த புரொஜக்ட்.. டைட்டிலை அறிவித்த சுரேஷ் சந்திரா..!

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் 'ஏகே 62’ என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தை அடுத்து உலக அளவில் பைக் சுற்றுலா செல்ல இருப்பதாகவும் அதன் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அஜீத் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் சற்றுமுன் சுரேஷ் சந்திரா அஜித்தின் அடுத்த உலக பைக் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES