7 வில்லன்கள்.. தமிழகத்தின் முக்கிய பகுதியில் கிளைமாக்ஸ்.. 'இந்தியன் 2' படம் குறித்த ஆச்சரிய தகவல்!
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த படத்தில் ஏழு வில்லன்கள் என்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்ட இடம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளன.

‘இந்தியன் 2’ படத்தில் மொத்தம் ஏழு வில்லன்கள் என்று அந்த படத்தின் குழுவினர் ஒருவர் கூறிய தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, ஜெயப்பிரகாஷ், குருசோமசுந்தரம், மாரிமுத்து, வெண்ணிலா கிஷோர், உள்ளிட்டவர்கள் வில்லன் கேரக்டரில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பிரம்மாண்டமாக தனுஷ்கோடியில் படமாக்கப்பட உள்ளதாகவும் இந்தியன் தாத்தா அவதாரம் இந்த படத்தில் மிக அபாரமாக வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ’இந்தியன் 2’படம் குறித்து இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆசிரியத்தை ஏற்படுத்தி உள்ளது

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.