'ஜெயிலர்' படத்தில் இணைந்த பிரபல ஸ்டார்.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதை அடுத்து ரஜினிகாந்த இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஆந்திரா சென்று இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானதை பார்த்தோம்.
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டுள்ள தகவலின்படி மோகன்லால் இந்த வேடத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது

ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் ஆகிய மூன்று சூப்பர் ஸ்டார்கள் ஒரே படத்தில் இணைவது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு, வசந்த் ரவி, அறந்தாங்கி நிஷா, பருத்திவீரன் சரவணன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.