ஜனனியை கதறி அழுவைத்த விக்ரமன் - அமுதவாணன்: என்ன நடந்தது?

ஜனனியை கதறி அழுவைத்த விக்ரமன் - அமுதவாணன்: என்ன நடந்தது?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் திடீர் திடீர் என உணர்ச்சிவசப்படுவது வழக்கமாக நடந்து வரும் நிகழ்வாக இருக்கும் நிலையில் திடீரென ஜனனியை விக்ரமன் மற்றும் அமுதவாணன் ஆகிய இருவரும் சேர்ந்து கதறி அழ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கில் சரியாக செயல்படாத போட்டியாளர் ஒருவரை காரணத்தோடு தேர்வு செய்யவும் என பிக்பாஸ் கூறுகிறார். இதனை அடுத்து இந்த வாரம் சரியாக விளையாடதவர் என விக்ரமன் ஜனனியை கூறுகிறார். ஜனனி டிப்ளமாட்டிக் ஆக செயல்படுவதாகவும் விக்ரமன் கூற, அப்போது ஜனனி, ‘நான் அப்படி இல்லை, ஆனால் நீங்கள் அதற்கான காரணத்தை கூறுங்கள் என்று கூறுகிறார்.

அப்போது குறுக்கிட்ட அமுதவாணன் சில கருத்துக்களைச் சொல்ல வந்தார். அப்போது ஜனனி ’நீங்கள் தயவுசெய்து வாக்குவாதம் செய்யாதீர்கள், நீங்கள் என்ன பிரச்சினை என்றாலும் வாக்குவாதம் செய்து கொண்டு இருக்கிறீர்கள்’ என்று கூறிய ஜனனி திடீரென கதறி அழ ஆரம்பித்தார். அவரை சக பெண் போட்டியாளர்கள் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இந்த சம்பவத்தின் முழு பின்னணி என்ன என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான அடுத்த புரமோவில் மகேஸ்வரி மற்றும் ஏடிகே ஆகியோர் மோதிக் கொள்கின்றனர். ஜனனி குறித்து ஒரு கருத்தை ஏடிகே சொல்ல வந்தபோது மகேஸ்வரி ரியாக்ட் செய்ததற்கு ஏடிகே கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இருவரும் காரசாரமாக மோதிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

LATEST News

Trending News

HOT GALLERIES