தனலட்சுமி பணக்கார வீட்டு பெண்ணா? பிக் பாஸில் சொன்னது எல்லாம் பொய் தானா

தனலட்சுமி பணக்கார வீட்டு பெண்ணா? பிக் பாஸில் சொன்னது எல்லாம் பொய் தானா

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளர்களாக பொதுமக்களும் பங்கேற்கலாம் என முதலில் அறிவிக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி தனலட்சுமி என்ற டிக்டாக் பிரபலம் பிக் பாஸ் போட்டியாளராக வந்திருக்கிறார்.

அவர் பிக் பாஸில் அவரது கடந்து வந்த பாதை கதை சொல்லும்போது, தன்னை அம்மா சிங்கிளாக இருந்து வளர்த்தார். மேலும் ஏழ்மையான குடும்பம் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது தனலக்ஷ்மியின் நண்பர்கள் என சொல்லி சிலர் பேட்டி அளித்து இருக்கின்றனர். அதில் தனலட்சுமி பணக்கார குடும்பத்து பெண், ஒரு செருப்பு வாங்குவது என்றால் கூட 12 ஆயிரம் கொடுத்து வாங்குவார் என தெரிவித்து உள்ளனர்.

மேலும் தனலட்சுமி இரண்டு படங்களில் நடித்து இருக்கிறார், அதை அவர் சொந்த ப்ரொடக்ஷனில் தயாரித்தார் எனவும் கூறி இருக்கின்றனர்.

அப்போ தனலட்சுமி பிக் பாஸ் வீட்டில் சொன்னது எல்லாமே பொய்யா என நெட்டிசன்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். 

LATEST News

Trending News