நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்: மணமகளுடன் மாஸ் புகைப்படம்!
நடிகரும் பிக்பாஸ் போட்டியாளருமான ஹரிஷ் கல்யாணுக்கு இன்று திருமணம் நடந்த நிலையில் மணமகளுடன் ஹரிஷ் கல்யாண் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் ’சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். அதன் பின்னர் ’அறிது அறிது’, ‘சட்டப்படி குற்றம்’, பொறியாளன்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் நடித்த ’பியார் பிரேமா காதல்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அதேபோல் ’இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ ’தனுசு ராசி நேயர்களே’ ’தாராள பிரபு’ ‘ஓ மணப்பெண்ணே’ போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் ’நூறு கோடி வானவில்’ ’ஸ்டார்’ மற்றும் ’டீசல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா உதயகுமார் ஆகிய இருவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு திரை உலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.




