'மாவீரன்' படத்தில் மிஷ்கினுக்கு என்ன கேரக்டர்? அவரே அளித்த பதில்!

'மாவீரன்' படத்தில் மிஷ்கினுக்கு என்ன கேரக்டர்? அவரே அளித்த பதில்!

சிவகார்த்திகேயன் நடித்த ’பிரின்ஸ்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி உள்ள நிலையில் அவர் தற்போது ’மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இணைந்துள்ளார் என்று செய்திகள் வெளியான நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த தகவலை மிஷ்கின் உறுதி செய்துள்ளார்.

இந்த படத்தில் தான் ஒரு எம்.எல்.ஏ கேரக்டரில் நடிப்பதாகவும் மெயின் வில்லன் கேரக்டரில் நடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் மிகவும் அன்புடன் பழகுகிறார் என்றும் அவர் மிக எளிமையுடன் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன் என்றும் தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்தியாவிலேயே அவர் சிறந்த நடிகர்களில் ஒருவராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் தெரிவித்தார். ’மாவீரன்’ திரைப்படத்தில் மிஷ்கினை வில்லனாக பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதிஷங்கர் நடிக்கும் இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இவர் ’மண்டேலா’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

LATEST News

Trending News