தீபாவளி ஸ்பெஷல்: இன்றும், நாளை செம அப்டேட்டுகள்!

தீபாவளி ஸ்பெஷல்: இன்றும், நாளை செம அப்டேட்டுகள்!

சிவகார்த்திகேயன் நடித்த ’பிரின்ஸ்’ மற்றும் கார்த்தி நடித்த ’சர்தார்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு வெளிவந்துள்ள நிலையில் இன்றும் நாளையும் தீபாவளி விருந்தாக பல அப்டேட்கள் வெளியாகவுள்ளதால் சினிமா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சசிகுமார் நடித்த ‘காரி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 5 மணிக்கு அந்த படத்தின் குழுவினர் அறிவிக்க உள்ளனர்.

அதேபோல் சியான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கும் படத்தின் டைட்டில் இன்று இரவு 8 மணிக்கு வெளியாக உள்ளது.

மேலும் தனுஷ் நடித்த ’வாத்தி’ படத்தின் சிறப்பு தீபாவளி போஸ்டர் நாளை காலை 9 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விஜய் சேதுபதி, விஷ்ணுவிஷால் நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவான ’இடம் பொருள் ஏவல்’ படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ’கலகத்தலைவன்’ படத்தின் டீஸர் நாளை தீபாவளி விருந்தாக 6 மணிக்கு வெளியாக உள்ளது.

மேலும் சிரஞ்சீவி நடிக்கும் 154வது பட டைட்டில் மற்றும் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அனைவரும் எதிர்பார்த்த தளபதி விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் சிறப்பு போஸ்டர் நாளை வெளியாகும் என்றும், அதில் ரிலீஸ் தேதி குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் போனிகபூர் தயாரிப்பில் உருவான ’துணிவு’ படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES